இத்தாலியன் சிக்கன் பாஸ்தா



என்னென்ன தேவை?

சிக்கன் - 100 கிராம்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - 1/2 கட்டு,
கேரட் - 1,
புரோக்கோலி - 1/4 கப், பெங்களூர் தக்காளி - 2,
துருவிய சீஸ் - 1 கப்,
மிளகுத்தூள், ஓரிகானோ, சில்லி ஃபிளேக்ஸ் - தலா 1/2 டீஸ்பூன், வேகவைத்த பாஸ்தா - 200 கிராம்.

ஒயிட் சாஸ் செய்ய...

மைதா - 2 டேபிள்ஸ்பூன்,
பால் - 1/2 லிட்டர்,
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மைதா சேர்த்து நன்கு வறுத்து, சிறிது சிறிதாக பால் ஊற்றி கட்டியில்லாமல் கெட்டியாக தோசை மாவு பதத்திற்கு விஸ்கர் கொண்டு கிளறி, உப்பு, மிளகுத்தூள் கலந்து இறக்கவும். சாஸ் ரெடி.சிக்கனை உப்பு சேர்த்து வேகவைத்து நறுக்கி கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம், தக்காளி, காய்கறிகள், சிக்கன், உப்பு, மிளகுத்தூள், சில்லிஃபிளேக்ஸ் போட்டு வதக்கவும். பிறகு பாஸ்தா, வெங்காயத்தாள், ஓரிகானோ சேர்த்து கிளறி, வெள்ளை சாஸ் ஊற்றி 5 நிமிடம் கிளறி மற்றொரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் சீஸ் பரவலாக தூவி பரிமாறவும். தேவையானால் மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் சூடு செய்து பரிமாறலாம்.