மீன் கட்லெட்



என்னென்ன தேவை?

முள் இல்லாத மீன் - 200 கிராம்,
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
முட்டை - 2, பிரெட் தூள்,
எண்ணெய், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


மீனை ஆவியில் வேகவைத்து எடுத்து உதிர்த்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, மீன், மசாலாத்தூள், உப்பு சேர்த்து 15 நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறியதும் உருளைக்கிழங்கு சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி கட்லெட்டாக தட்டி முட்டை கலவையில் தோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து சாஸ் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.