இறால் சீஸ் ரோல்



என்னென்ன தேவை?

சப்பாத்தி செய்ய...


கோதுமை மாவு - 2 கப்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
வெதுவெதுப்பான தண்ணீர்,
உப்பு - தேவைக்கு.

ஸ்டஃப்பிங் செய்ய...


இறால் -  200 கிராம்,
சீஸ் - 100 கிராம்,
பொடி யாக நறுக்கிய வெங்காயம் - 2,
பெங்களூர் தக்காளி - 1, குடைமிளகாய் - 1/4 கப்,
கரம்மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்திகளாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, குடைமிளகாய், இறால், உப்பு, மசாலாத்தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கி மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும். சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்.