பென்னே பாஸ்தா



என்னென்ன தேவை?

பாஸ்தா - 200 கிராம்,
வெண்ணெய், தக்காளி சாஸ் - தலா 2 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த பட்டாணி, சீஸ் துருவல் - தலா 1 கப்,
மல்லித்தழை - 1 கைப்பிடி,
உப்பு - தேவைக்கு,
தைம் (Thyme), சில்லிஃபிளேக்ஸ், ஓரிகானோ - தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கேரட் - 2,
பீன்ஸ் - 5,
வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல், பெங்களூர் தக்காளி - 2.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து பாஸ்தா, உப்பு, எண்ணெய் ஊற்றி பாஸ்தா வெந்ததும் வடிகட்டி,  மீண்டும் குளிர்ந்த நீர் ஊற்றி வடிகட்டி தனியாக வைக்கவும். கடாயில் வெண்ணெய் போட்டு பூண்டு, வெங்காயம்,  தக்காளி, காய்கறிகள் சேர்த்து வதக்கி, சில்லிஃபிளேக்ஸ், உப்பு போட்டு வேக வைக்கவும். பின்பு பாஸ்தா, தக்காளி  சாஸ், ஓரிகானோ, தைம், மல்லித்தழை போட்டு 5 நிமிடம் மூடி வேக வைக்கவும். கடைசியாக துருவிய சீஸ் போட்டு  கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.