மட்டன் சாப்ஸ்



என்னென்ன தேவை?

எண்ணெய் - 4 தேக்கரண்டி,
பட்டை- ½ தேக்கரண்டி,
ஏலக்காய்- ½ தேக்கரண்டி,
கிராம்பு- ½ தேக்கரண்டி,
மிளகு- ½ தேக்கரண்டி,
வெங்காயம் - 3,
பச்சைமிளகாய் - 5,
மட்டன் - 250 கிராம்,
தக்காளி - 2,
மட்டன் மசாலா - 4 தேக்கரண்டி,
தயிர், புதினா, கொத்தமல்லி, உப்பு - சிறிது.

எப்படிச் செய்வது?

முதலில், வாணலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கிராம்பு, வெங்காயம், பச்சை, மிளகாய் சேர்த்து தாளிக்கவும், மட்டன், தக்காளி, மட்டன் மசாலா, தயிர், உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிடவும். இறுதியாக புதினா, கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.