புதினா மட்டன்



என்னென்ன தேவை?

எண்ணெய் - 5 தேக்கரண்டி,
வெங்காயம் - 3,
மட்டன் - 300 கிராம்,
பட்டை- ½ தேக்கரண்டி,
காய்ந்தமிளகாய்-3,
மிளகு- 1 தேக்கரண்டி,
ஏலக்காய், - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தூள்- ½ தேக்கரண்டி,
தயிர், உப்பு சிறிது.

அரைக்க...

புதினா, இஞ்சிபூண்டு- 3 தேக்கரண்டி,
கொத்துமல்லி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய்-6.

எப்படிச் செய்வது?

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், மட்டன், பட்டை, காய்ந்தமிளகாய், மிளகு, ஏலக்காய், கறிவேப்பிலை, போட்டு நன்கு வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவை சேர்க்கவும். பின்பு மல்லித்தூள், தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி பரிமாறவும்.