இயக்குநராகும் இசையமைப்பாளர்!



விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி என்று இசையமைப்பாளர்கள் வரிசையாக மேக்கப் போட்டுக் கொண்டு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சக்தி ஆர்.செல்வாவோ, கிளாப் போர்டை கையில் எடுத்துக் கொள்கிறார். கரண் நடிப்பில் வெளியான ‘கந்தா’ படத்துக்கு இவர்தான் இசையமைத்தார். ஆனால், இயக்கத்தில்தான் ஆர்வமாம்.

ஆரம்ப நாட்களில் அஜீத்திடம் இவர் ஒரு கதை சொல்லி ஓக்கே ஆகியிருந்ததாம். அந்த பிராஜக்ட் டேக் ஆஃப் ஆகாததாலேயே இசையமைப்பாளராக ஆனாராம். ஒருவழியாக தன்னுடைய இயக்குனர் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.

அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதோடு இசையும் அமைக்கிறார். படத்தின் பெயர் ‘தோழா தோழி’. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு பார்வையற்றோர் வேடம் செம வெயிட்டாம். அதற்கு மட்டும் பிரகாஷ்ராஜை கேட்டு வருகிறார் செல்வா.

- தேவ்