கவர்ச்சி ஹோலி!



மகளிர்தின செய்தியாக ‘சன்னி லியோனைப் போல பெண்கள் ஆண்களுக்கு சந்தோஷத்தை தரவேண்டும்’ என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா சொன்னது, பாலிவுட் நடிகைகளிடம் புயலைக் கிளப்பியிருக்கிறது. வர்மாவின் வக்கிரம் வெளிப்படுகிறது என்று சாடியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

“ஷாருக், சல்மான், அமீர்கான் உட்பட எந்த சூப்பர் ஸ்டாருடனும் நான் நடிக்க விரும்பலை. ஏன்னா, நானே ஒரு சூப்பர் ஸ்டார்” என்று தடாலடியாக அறிவித்திருக்கும் கங்கனா ரணாவத்தை எப்படி ஹேண்டில் செய்வது என்று புரியாமல் முழிக்கிறார்கள் சூப்பர் ஸ்டார்கள்.

சமீபத்தில் ஒரு விழாவுக்காக லண்டன் சென்ற பிபாஷாபாசுவுக்கு, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு செல்போன் கொடுத்திருக்கிறார்கள். அந்தப் போனில் குறைவான கட்டணத்துக்கே பேலன்ஸ் இருந்ததால் டென்ஷனான பிபாஷா, தன்னிடம் போனை கொடுத்த பெண்ணின் மீதே வீசியெறிந்து அநாகரிகமாக நடந்து கொண்டாராம்.பிகினி டிரெஸ்ஸில் ஹோலி கொண்டாடி, வீடியோ படமெடுத்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார் செக்ஸ் பாம் பூனம் பாண்டே.

- ஜியா