ஒரு முகத்திரை



கிழிந்ததா முகத்திரை?

டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட். அதிதி ஆச்சார்யாவும், ஸ்ருதியும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவிகள். இருவரும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களை சாந்தப்படுத்த மனோதத்துவ நிபுணர் ரகுமானின் உதவியை நாடுகிறது கல்லூரி.ரகுமானின் முயற்சியால் இருவரும் நெருங்கிய தோழிகளாகிறார்கள்.

கல்லூரி முடிந்தபிறகு தன்னுடைய ஃபேஸ்புக் காதலனைத் தேடி சென்னைக்கு வருகிறார் அதிதி. காதலன் யாரென்று தெரிந்ததும் கடுமையாக அதிர்ச்சியடைகிறார். அதிதியைக் காதலித்ததாக ஏமாற்றியவரும் அவரைக் கொல்ல முயற்சிக்கிறார். பரபர கிளைமேக்ஸ் எல்லா சஸ்பென்ஸ்களையும் விடுவிக்கிறது.

ரகுமானின் நடிப்புதான் படத்தின் ஸ்பெஷல். அதிதி அழகாக இருக்கிறார். நடிப்பும் ஓக்கேதான்.சரவண பாண்டியனின் ஒளிப்பதிவும் சிவபெருமானின் பின்னணி இசையும் படத்துக்கு பலம். கொஞ்சம் அரிதான கதையைத் தேர்வு செய்ததற்காக இயக்குநர் செந்தில் நாடனை பாராட்டலாம்.