படம் இயக்குகிறார் நடிகவேளின் பேரன்!



‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனத்துக்காக இயக்குநர் அட்லி தயாரித்து, ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ வழங்கும் படம், ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதாரவி, ராதிகா நடிக்கின்றனர்.

எம்.ஆர்.ராதாவின் பேரனும், பிரியதர்ஷன் உதவியாளருமான ஹைக் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் பணியாற்றியுள்ளார்.

அட்லி கூறுகையில், “என்னை இயக்குநராக அறிமுகப்படுத்திய நிறுவனத்துக்கு படம் தயாரித்துக் கொடுக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது” என்கிறார். “மற்ற திகில் கலந்த காமெடிப் படங்களில் இருந்து ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வித்தியாசமாக இருக்கும்’ என்கிறார் ஹைக்.

- டீயார்