வெறும் காற்றடைத்த பையடா!சரோஜாதேவி பதில்கள்

* அழகு vs கவர்ச்சி?
- ப.முரளி, சேலம்
மனைவியிடம் அழகையும், காதலியிடம் கவர்ச்சியையும் எதிர்பார்க்கிறான் ஆண்.

* சில பெண்களுக்கு முதுகு, மைதானம் மாதிரி பரந்து விரிந்திருக்கிறதே?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர் மாவட்டம்)
கொஞ்சம் விட்டா ஸ்டம்பு நட்டு கிரிக்கெட் ஆடுவீங்க போலிருக்கே?

* உதடு படைக்கப்பட்டது எதற்காக?
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
கடிக்கப்படுவதற்கு என்பது ஆண்களின் சித்தாந்தம்.

* ‘வெறும் காற்றடைத்த பையடா’ என்று சித்தர்கள் சொல்லுகிறார்களே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
அது அனுபவ வாக்கு. ஆசையும், மோகமும் தீர்ந்தபிறகு அனைத்துப் பயலுமே சித்தனாகத்தான் மாறுகிறான்.

* காதல் என்பது யுத்தமா? விளையாட்டா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
உடல்ரீதியாக யுத்தம். மனரீதியாக விளையாட்டு.