ரோசாப்பூ நைட்டிக்காரி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘பாகுபலி-2’ படத்துக்கு நீங்கள் வழங்கியிருப்பது விமர்சனமல்ல. கம்பீரமான பாராட்டு. “யார் அங்கே, இந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதியவருக்கு தட்டுநிறைய பொற்காசுகளை கொண்டு வாருங்கள்” என்று ராஜமாதா சிவகாமி ஆணையிடுமளவுக்கு பாடித் தீர்த்துவிட்டீர்கள்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘ஆறு வித்தியாசங்கள்’ பகுதியில் அஜீத். இன்னும் ‘தல பர்த்டே’ ஹேங் ஓவர் உங்களுக்கு முடியலையா சார்?
- ப.முரளி, சேலம்.

இசையமைப்பாளர் பரத்வாஜை நினைவில் வைத்துக் கொண்டு நீண்டகாலம் கழித்து அவருடைய பேட்டியை வெளியிட்ட ‘வண்ணத்திரை’யை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் சுண்டியிழுக்கும் சுந்தரியின் கவர்ச்சியை முகப்பில் காட்டி மனசுக்குள் குளிர்ச்சியை தந்த உங்களுக்கு ஜில்லான தேங்க்ஸ்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கோடையில் அனலாய் கொதிக்கிறது எங்க உடம்பு. குளிர் தருவாய் நடுப்பக்கத்தில் ‘ரெய்டில் எதுவும் மிஞ்சலை’ என்கிற
அறிவிப்பு மூலம் உங்க குசும்பு.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவது மட்டுமின்றி உச்சபட்சமாக ‘பாராட்டியே ஆக வேண்டும்’ என்கிற நிலையில் ராஜமவுலியை தங்கள் விமர்சனக் குழு பாராட்டியிருப்பது, கலைக்கும் கலை வித்தகருக்கும் ‘வண்ணத்திரை’ மகுடம் சூட்ட மறுப்பதில்லை என்பதற்கு தகுந்த உதாரணம்.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

கடைசி பக்கத்தில் ‘ரோசாப்பூ நைட்டிக்காரி’ என்று சாயேஷாவின் ஸ்டில்லுக்கு கமெண்டு எழுதிய கைகளுக்கு வைர மோதிரமே அணிவிக்க வேண்டும்.
- ஆர்.கார்த்திகேயன், சென்னை-102.