100 வது படம்!தமிழ் நட்சத்திரங்கள் சிலரின் நூறாவது படங்களின் பட்டியல் :

எம்.ஜி.ஆர் - ‘ஒளிவிளக்கு’, சிவாஜி கணேசன் - ‘நவராத்திரி’, ஜெமினி கணேசன் - ‘சீதா’, ஜெய்சங்கர் - ‘இதயம் பார்க்கிறது’, ரவிச்சந்திரன் - ‘பம்பாய் மெயில்’, முத்துராமன் - ‘புன்னகை’, ரஜினிகாந்த் - ‘ஸ்ரீராகவேந்திரா’, கமல்ஹாசன் - ‘ராஜபார்வை’, சிவகுமார் - ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’, விஜயகாந்த் - ‘கேப்டன் பிரபாகரன்’, சத்யராஜ் - ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’, பிரபு - ‘ராஜகுமாரன்’, அர்ஜுன் - ‘மன்னவரு சின்னவரு’, சரத்குமார் - ‘தலைமகன்’, சாவித்திரி - ‘கொஞ்சும் சலங்கை’, சரோஜாதேவி - ‘பெண் என்றால் பெண்’, கே.ஆர்.விஜயா - ‘நத்தையில் முத்து’, ஜெயலலிதா - ‘திருமாங்கல்யம்’, ஜெயசித்ரா - ‘நாயக்கர் மகள்’, ரோஜா - ‘பொட்டு அம்மன்’.

கார்த்திக்கின் நூறாவது படம்தான் குழப்பமாக இருக்கிறது. ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘பூவரசன்’, ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ என்று பலரும் பல படங்களை குறிப்பிடுகிறார்கள். கார்த்திக்கும் தன்னுடைய படங்கள் ரிலீஸான பட்டியலை முறையாக தொகுக்காததால் அவரது நூறாவது திரைப்படம் என்று குறிப்பிட்டு ஒரு படத்தை விளம்பரப்படுத்த முடியாமல் போய்விட்டது.

- தேவா