சல்மானின் கஸ்டடியில் நாகினி!கேன்சரிலிருந்து விடுபட்டு வந்த நடிகைகள் மனிஷா கொய்ராலா, லிசா ரே உள்பட சில இந்தி நடிகைகள் இணைந்து கேன்சர் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தில் நடிக்க உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து அமீர்கானும் இதில் நடிக்கிறார்.‘நாகினி’ டிவி சீரியலில் நடித்த மவுனி ராயின் கவர்ச்சியில் மயங்கி, அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த சில தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முண்டியடிக்கிறார்களாம். ஆனால் மவுனியோ சல்மான் கானின் பிடியில் சிக்கியுள்ளார். ‘உன்னை நானே அறிமுகப்படுத்துகிறேன்’ என சல்மான் வாக்கு கொடுத்துள்ளாராம்.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த விழாவில் பங்கேற்றபோது மீடியாவினர் சிலர் தன்னை பிரியங்கா சோப்ரா என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதால் கடுப்பாகிப் போயுள்ளார் தீபிகா படுகோன். ‘ஹாலிவுட்டில் நான் நடித்தபிறகும் எனது பெயர் தெரியாமல் இருக்கிறாங்க. கொஞ்சமும் இங்கிதம் தெரியாதவங்க’ எனச் சாடியுள்ளார்.

கான் நடிகர்களை தாக்கிப்பேசி ஏற்கனவே அவர்களை பகைத்துக்கொண்ட கங்கணா ரனாவத், இப்போது ஜான்சி ராணி படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் கான் நடிகர்கள் வசூல் சாதனை க ளையெல்லாம் முறியடிக்கும் என தடாலடியாக சவால் விட்டிருக்கிறார்.

- ஜியா