லென்ஸ்ஆன்லைன் விபரீதம்!

வாட்ஸப்பில் கில்மா வீடியோ வந்தால், அதை உடனே டெலிட் செய்யாமல், ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று ஏதோ ஒரு க்ரூப்புக்கு ஃபார்வேர்ட் செய்கிறோம். அந்த வீடியோவில் இடம்பெற்றவரின் வாழ்க்கை என்னாகும் என்கிற நினைப்பே நமக்கு இல்லை. இம்மாதிரி ஆன்லைன் விபரீதங்களின் போக்கை விலாவாரியாக எடுத்துக் காட்டுகிறது லென்ஸ்.

ஆன்லைன் உல்லாசங்களை அனுபவிக்கும் கேரக்டரில் அதகளப்படுத்தி இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். மாட்டிக் கொண்டு முழிபிதுங்கும் காட்சிகளில் சபாஷ் வாங்குகிறார். வார்த்தைகளில் குண்டூசி ஏற்றி மிரட்டும் காட்சிகளில் கலக்குகிறார் ஆனந்த்சாமி.

இரண்டே அறைக்குள் நடக்கும் கதையை வித்தியாசமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எஸ்.ஆர்.கதிர். ஜி.வி.பிரகாஷின் இசை படத்துக்கு கூடுதல் பலம்.
ஜியோ காலத்தில் வாழும் தலைமுறையினருக்கு ஆன்லைன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களது கடமைகளையும் சுட்டிக் காட்டக்கூடிய படத்தை தயாரித்ததற்காக தன்னுடைய காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் வெற்றிமாறன்.