யம்மா அழகம்மா... இருதயம் மெழுகம்மா!



‘எனர்ஜியா டான்ஸ் ஆட ஒரு பொண்ணு கூட இல்லையா?’ என்கிற தமிழ் சினிமாவின் நீண்டகால ஏக்கத்தைத் தீர்க்கவே வந்திறங்கியிருக்கிறார் ‘வனமகன்’ சாயிஷா.‘ஹாய்! செமையா டான்ஸ் ஆடுறீங்க. பேசலாமா?’ என வாட்ஸப்பினால், ‘ஹெல்லோ! முதல்ல என் பெயரை கரெக்ட்டா ஸ்பெல் பண்ணுங்க. அப்போதான் பேசுவேன்’ என்று குறும்பாக ரிப்ளை செய்தார்.

 ‘Saisha, Sayesha, Sayyesha, இல்லை.. இல்லை... SAYYESHAA’ இது சரியா என்று கேட்டதுமே, ‘சும்மா ஜாலியா விளையாடினேன். இப்ப ஓகே. பேசலாம்’ என்று பதில் அளித்தார். உடனே போன் அடித்தோம். முதல் ரிங்கிலேயே பிக்கப் செய்தார்.“திடீர்னு ‘என்ன பொண்ணுடா’ ரேஞ்சுக்கு ட்ரீம் கேர்ள் ஆகிட்டீங்களே?”

“பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப்குமார் பேத்தி, இந்த அடையாளம் மட்டும்தான் எனக்கு சினிமா உறவு. மும்பை, மகாராஷ்டிரா பொண்ணு. அப்பா, தாத்தா இப்படி சினிமா குடும்பமா இருந்தாலும் , சினிமா பத்திரிகைகள் கூட வீட்ல வாங்க மாட்டாங்க. நான் கூட செம படிப்ஸ் பொண்ணு. அறிவியலில் IB படிச்சேன். அப்புறம்தான் சினிமா ஆர்வம். வீட்டுக்கு ஒரே செல்லமான பொண்ணு! எங்க வீட்ல எனக்கு முழு ஆதரவு கொடுத்தாங்க. எனக்கு என்ன இஷ்டமோ அதை நான் செய்ய எனக்கு முழு சுதந்திரம் உண்டு!”

“சினிமா வாய்ப்பு எப்படி அமைஞ்சது?”
“முதல் படம் தெலுங்குலே ‘அகில்’, நாகார்ஜுனா பையன் அகில் கூட நடிச்சேன். அப்புறம் அஜய்தேவ்கனோட இந்தியிலே ஷிவாய். அப்புறம்தான் ‘வனமகன்’. ஆரம்பத்துலேயே இவ்ளோ ஸ்கோப் கிடைச்சது என்னுடைய லக்னு சொல்லலாம்!”
“நீங்க ‘வனமகன்’ படத்தில் ரிஸ்க் எடுத்துதான் நடிச்சீங்க இல்லையா?”

“மலையில உருண்டு வர்ற மாதிரி ஒரு சீன் இருக்கும். அதுல நான் டூப் போடாம ஸ்டண்ட் மாஸ்டர் சொல்லிக் கொடுக்க செய்தேன். செம ரிஸ்க்கி சீன்!”“இவ்ளோ நல்லா நடனம் ஆடுறீங்களே?”“தாங்க்ஸ். எனக்கு ஒன்பது வயசிருக்கும்போதே நடனம் ஆட ஆரம்பிச்சுட்டேன். என்னுடைய பொழுதுபோக்கு, ஆர்வம் எல்லாமே டான்ஸ்தான்.”

“இப்போ பண்ணிக்கிட்டிருக்கிற ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ பத்தி சொல்லுங்களேன்!”
“பிரபுதேவா சார் இயக்கம். இன்னும் நான் டான்ஸ்ல நிறைய நுணுக்கங்கள் கத்துக்கவும் வாய்ப்பு இருக்கு. கார்த்திக், விஷால் ரெண்டு பெரிய ஹீரோக்கள், நான் ஒரே ஹீரோயின். இதுலயே என் கேரக்டர் எவ்வளவு வெயிட்டா இருக்கும்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.”
“உங்க கருப்பு மற்றும் வெள்ளை ராஜாக்கள் பத்தி சொல்லுங்களேன்?”

“விஷால், கார்த்தி. ரெண்டு பேரும் நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு உழைப்பாளிகள். மேலும் எனக்கு ரெண்டாவது படம். அந்த எண்ணமே வர விடாம காட்சிகள்ல எனக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்யறாங்க. ஃப்ரெண்ட்லி மைண்டட் பீப்பிள்.”
 “சாயிஷாவுடைய ரகசிய பொழுதுபோக்கு என்ன?”

“நான் டேஸ்ட்டியா கேக் பண்ணுவேன். தனியா க்ளாஸ் கூட போய் கத்துக்கிட்டேன். வெரைட்டியான கேக் செய்யணும்னா ரொம்ப பிடிக்கும். வாங்களேன் ஒரு நாள் வீட்டுக்கு, கேக் சாப்பிடலாம்.”
“கிசுகிசு பற்றி உங்க கருத்து?”

“படிக்க சூப்பரா இருக்குமே! எல்லாருக்குமே கிசுகிசுக்கள் ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அப்படித்தான். அதுவே என்னைப்பத்தி அப்படின்னா பெருசா அலட்டிக்க மாட்டேன். அது போக்குல விட்டுடுவேன். அவ்ளோதான்.”“ரொமான்டிக் ஹீரோயின்- கேரக்டர் ஹீரோயின், எது சாயிஷா சாய்ஸ்?”“ரொமான்டிக் ஹீரோயின்தான். நான் என் சொந்த வாழ்க்கையிலும் ரொம்ப அமைதியான, மென்மையான பொண்ணு.

அப்புறம்தான் ஃபேன்டஸி, ட்ராமாட்டிக்னா பிடிக்கும். அதனால் ரொமான்டிக்குன்னா உடனே ஓக்கே சொல்லிடுவேன். அதாவது ‘ரோஜா’, ‘தில்வாலியா துல்ஹானியா லே ஜாயேங்கே’ அப்படியான படங்கள். ரொமான்டிக் ஹீரோயினா இருந்தாலும் நடிக்கவும் வாய்ப்பு இருக்கணும்.”
“சமீபமாக அதிகமாக முணுமுணுக்கும் பாடல்?”

“எம்மா ஹேய் அழகம்மா… இருதயம் இருதயம் மெழுகம்மா.”
“பிடிச்ச ஹீரோ,  ஹீரோயின் யார்?”
“விஜய், அஜீத், அனுஷ்கா, நயன்தாரா.”
“தமிழ், இந்தி, தெலுங்கு - 
எந்த மொழி நெருக்கமான
உணர்வுகள் கொடுத்துச்சு?”

“நிச்சயமா தமிழ்தான். இங்க  இருக்க மக்கள் எல்லாத்தையும் மனசுக்கு நெருக்கமா பார்க்கறாங்க. அக்கறை அதிகமா இருக்கு. ஒரு படத்துல வேலை செய்தாக்கூட ஒரு குடும்ப உறுப்பினர் மாதிரி நடத்துறாங்க!”“நான்கு மொழிகளுக்கு மேல நடிச்சிருக்கீங்க! சினிமாவுல என்ன மாற்றம் இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க?”“தமிழ் சினிமா படப்பிடிப்புகள்ல நான் பார்த்த அதே குடும்பம் போன்ற அமைப்பு எல்லா சினிமா மொழிகள்லயும் வரணும். அந்த ஒரு விஷயம் என்னை ஆச்சர்யப்பட வெச்சது!”

“உங்க சினிமா க்ரஷ் யாரு?”
“எல்லார் கூடவும் நடிக்கணும், ஓ, ஆனா க்ரஷ் வேறயோ. ஆங்,  ஹாலிவுட் ஹீரோ லியோனார்டோ டிகாப்ரியா. ஆனால் அவரே ஹீரோவானாலும் கதை கேட்டு நல்ல படமா இருந்தாதான் ஓகே சொல்வேன். எப்பூடி?”
 

- ஷாலினி நியூட்டன்