நெஞ்சம் நிறைஞ்சிருக்கு



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நம்ம நடிகைகள் சும்மா இருக்கும்போது என்ன செய்வார்கள் என்பதை அலசி ஆராய்ந்து நீங்கள் தெரிவித்தது மிகவும் உபயோகமாக இருந்தது. நாட்டுக்கு அவசியமான நல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

7-ஆம் பக்க அஸ்வினி புளோஅப்பில் ‘குழி கன்னத்தில் மட்டுமல்ல’ என்று குறிப்பிட்டிருந்தீர்கள். வேறு எங்கிருக்கிறது என்று தேடித்தேடி சலித்துவிட்டேன்.
- ரமணிதரன், திருப்பதி.

‘ஒண்டிக்கட்ட’ நேகா வொண்டர்ஃபுல்லாக இருக்கிறார். கிளாமர் குறித்து இப்போது வரும் நடிகைகள் ரொம்ப பாதுகாப்பாகவே பதில் சொல்கிறார்கள்.
- கிருஷ்ணமூர்த்தி, கொண்டித்தோப்பு.

‘தந்திரன் மந்திரம் போடுவான்’ என்கிற இயக்குநர் கண்ணனின் நேர்காணலை வாசித்துவிட்டு படம் பார்க்கச் சென்றால் தியேட்டர்கள் ஸ்ட்ரைக். தமிழ் சினிமாவின் எதிர்காலம் என்னாகுமோ என்று கவலை ஏற்படுகிறது.
- குந்தவை, தஞ்சாவூர்.

‘டைட்டில்ஸ் டாக்’ தொடரில் இதுவரை வெளிவந்த பிரபலங்களின் கட்டுரைகளிலேயே டி.பி.கஜேந்திரன் எழுதியதுதான் டாப் என்பேன். அவருடைய சினிமாவுலக அனுபவங்களோடு, வாழ்க்கை குறித்த படிப்பினையைப் பெற்றுக் கொண்டதை மிகவும் அருமையாக எழுதியிருந்தார்.
- ரஞ்சனி, மொரப்பூர்.

நடுப்பக்க அஸ்வினியின் படத்தைப் பார்த்த எங்களுக்கும் ‘நெஞ்சம் நிறைஞ்சிருக்கு’.
- முல்லை வேந்தன், கன்னியாகுமரி.