பூவில் தேன் சுரந்தால்?



சரோஜாதேவி பதில்கள்

* கட்டிப்பிடி வைத்தியம் கைகொடுக்குமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
எந்தக் காலத்துலே இருக்கீங்க? கர்லாக்கட்டை வைத்தியமெல்லாம் வந்தாச்சு.

* காதலி கண்ணடித்தால் காதலன் என்ன செய்யவேண்டும்?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
கண்ணடித்தால் கையைப் பயன்படுத்துங்கள். ஏதாவது நினைச்சுக்கப் போறீங்க. அதாவது காதலியின் கைப்பிடிக்க வேண்டும்.

* கண்ணழகு, முன்னழகு, பின்னழகு; இவை மூன்றில் எது முக்கியம்?
- கே.கே.பாலசுப்பிரமணியன், பெங்களூரு.
பூவில் தேன் சுரந்தால் போதும். அழகாக பூத்திருக்கிறதா என்பதெல்லாம் வண்டுக்கு இரண்டாம் பட்சம்தான்.

* கிக்கிற்கும், கிளுகிளுப்புக்கும் என்ன வித்தியாசம்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சோடாவை உடைத்து அப்படியே பாட்டிலை கவிழ்த்துக் கொள்வதற்கும், கிளாஸில் ஊற்றி பொறுமையாக ‘சிப்’ செய்து குடிப்பதற்குமான வித்தியாசம்தான்.

* இடிதாங்கி என்றால் என்ன?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
பப்பா. ஒண்ணுமே தெரியாது பாரு.