பெட்ரோல் என்ன ரேட்டு?



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

வாட்ஸப் காலத்திலும் வாலிபர்களின் இதயக்கனியாக ‘வண்ணத்திரை’ பக்கத்துக்கு பக்கம் வாலிப வனப்பு கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் விமர்சனத்தை இமைக்காமல் வாசித்தேன். படத்தைப் போலவே, அதைப்பற்றிய உங்கள் விமர்சனமும்  விறுவிறுப்பு.
- அ.சம்சுதீன், நெய்க்காரப்பட்டி.

‘முதல் இடம்’ என்கிற தலைப்பில் விதார்த் எழுதிய ‘டைட்டில்ஸ் டாக்’ கட்டுரை உழைப்பின் மேன்மையை உணர்த்தியது.
- கவிஞர் நீலமலை ஜே.பி., உதகை-2.

நடுப்பக்க ஆஷாவை உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கிறேன். உலகம் மட்டுமல்ல; பிரபஞ்சமே தெரிகிறது.
- ராஜேஷ், புதுச்சேரி.

‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம் மட்டுமல்ல; அந்தப் படத்தை இயக்கிய லெனின் பாரதியுமே கூட தமிழ் சினிமாவில் அரிதாகப்  பூத்திருக்கும் குறிஞ்சி மலர்தான். வாழ்த்தி வரவேற்போம்.
- குந்தவை, தஞ்சாவூர்.

13-ஆம் பக்கத்து பிந்து மாதவி, ‘பெட்ரோல் என்ன ரேட்டு?’ என்று கேட்பது டைமிங் குறும்பு சார்.
- ராகவன், நங்கநல்லூர்.

தொண்ணூறுகளின் ஹீரோ விக்னேஷின் பேட்டி அருமை. வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்பா என்கிற அவரது உரிமைக்குரல் இன்னமும்  ஓங்கி ஒலிக்க வேண்டும்.
- நீலமேகம், காரைக்கால்.

முன் அட்டை மற்றும் பின் அட்டையில் :
சோனம் பாஜ்வா