கவர்ச்சி இருந்தா சொல்லு.. ‘கட்டிங்’ போடலாம்!சமீபத்தில் வெளியான ‘கட்டிங்’ படத்தில் ஏகத்துக்கும் டபுள்மீனிங் டயலாக்குகள் இருந்ததால், கடுமையான பரபரப்பு ஏற்பட்டது. படத்தின் லீட்ரோல் செய்த டிராயிங் நடிகை, இனிமேல் இப்படியான ‘ஏ’ரக படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று சபதமே செய்திருக்கிறாராம்.
கதை சொல்லப்போகும் இளம் இயக்குநர்களிடம், “கவர்ச்சியான கேரக்டரா இருந்தா மட்டும் சொல்லு, ‘கட்டிங்’ போட்டுக்கலாம். இல்லேன்னா கெளம்பிக்கிட்டே இரு” என்று இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம்.

பொதுவாக ‘கிளாமர் காட்டணும்’ என்றால், ஹீரோயின்களிடம் தயங்கித் தயங்கித்தான் கேட்பார்கள். டிராயிங்கோ எள் என்றால் எண்ணெயாக வந்து நிற்கிறாரே என்று இண்டஸ்ட்ரியே ஆச்சரியத்தில் மூக்கு மேல் விரல் வைக்கிறதாம்.

- யுகி