நடுப்பக்க பனநுங்கு!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
 ‘காஞ்சனா-3’ படத்தில் அகோரியாக நடித்தவர் யாரென்று ரசிகர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சம்பத்ராமின் சிறப்பான பேட்டியை வெளியிட்டு, அந்த கேள்விக்கு விடையளித்து விட்டீர்கள். நன்றி. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
நடுப்பக்கத்து நேஹா, ‘அட்ரஸ் குடுறா’ என்று அலங்கோலமாக மிரட்டுவது திகிலடைய வைக்கிறது. சமீபத்தில் யூட்யூப்பில் வைரல் ஆன வார்த்தை ஆயிற்றே இந்த ‘அட்ரஸ் குடுறா’. - கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
அக்னி நட்சத்திர வெயில் அனலில் வெந்து நொந்துபோய் கிடக்கும் எங்களுக்கு நடுப்பக்க பனநுங்கு தேவதை கேட்டால் அட்ரஸ் என்ன, ஆதார் கார்டையே தூக்கிக் கொடுப்போம். - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
முன்பக்கத்தில் ‘முழுநீள போதை’யில் தொடங்கி, நடுப்பக்கத்தில் ‘அட்ரஸ் குடுறா’ன்னு அதட்டி, பின்னட்டையில் ‘சும்மாவே இருக்க மாட்டாராம்’ என்று சிணுங்கி முடிப்பதில் இருக்கிறது ‘வண்ணத்திரை’யின் 35 ஆண்டுகால சீக்ரட் ஃபார்முலா. - வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.
அட்டைப்பட ரகுல்ப்ரீத் சிங்கை அவசரக் கோலத்தில் படம் புடிச்சி எங்களை மாதிரி விடலைப்பசங்களை விறுவிறுக்க வெச்சிட்டீங்களே பாஸூ? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
பார்த்திபன் என்றாலே வித்தியாசம்தான். அவருடைய ‘ஒத்த செருப்பு’ மொத்தமாக ரசிகர்களை அள்ளிக் கொள்ளும் என்று நம்புவோம். - எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
வகுப்பறையை புறக்கணித்து மேக்கப் ரூமுக்கு வந்த ரிச்சாவின் கனவு பலிக்காமல் போனது வருத்தமே. - கே.முருகன், திருவண்ணாமலை.
|