தொங்கு பாராளுமன்றம்!சரோஜாதேவி பதில்கள்

* அந்த விஷயத்தில் பாயும் புலி ஆணா, பெண்ணா?
- பி.சேக்கிழார், கோவிலம்பாக்கம்.
ஆணோ, பெண்ணோ; யாருக்கு பசியெடுக்கிறதோ வேட்டைப்புலி ஆகிறார்.

* அனல் வெப்பத்திலிருந்து தப்பிக்க அத்தானுக்கு ஓர் ஐடியா கொடுக்கலாமே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வீட்டிலிருக்கும்போது உள்ளாடையைத் தவிர்க்கவும். ‘கட்டோடு குழலாட’ பாடிக்கிட்டு காத்தாட ஜாலியா இருக்கலாம்.

* தண்ணிக்கும், கன்னிக்கும் என்ன ஒற்றுமை?
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
ரைமிங்கா வந்தா எது வேணும்னாலும் கேட்பீங்களா? நல்லவேளை உங்க கேள்வி இன்னும் கொஞ்சம் நீளலை.

* முதலிரவு என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
முதல் இரவாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையில் வைத்திருப்பார்கள்.

* தொங்கு பாராளுமன்றம் ஏற்படுமா?
- கே.கே.பாலசுப்பிரமணியன், குனியமுத்தூர்.
போதுமான பலமில்லை என்றால் ஏற்படும்.