ஹாட்ரிக் கூட்டணி!‘எந்திரன்’, ‘சர்கார்’, ‘பேட்ட’ போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ‘SK 16’ என்ற ஒர்க்கிங் டைட்டிலோடு இதன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இயக்கம் பாண்டிராஜ். இவர் சிவகார்த்தியன் நடித்த ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் நட்டி என்கிற நடராஜ், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, ‘நாடோடிகள்’ கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா ஆகியோரும் இருக்கிறார்கள்.

டி.இமான் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு நீரவ்ஷா. கலை இயக்கம் வீரசமர், படத்தொகுப்பு ஆண்டனி எல்.ரூபன். படத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- ரா