ஸ்பீக்கரு...



‘‘எனக்கு முன்னால் பேசியவரைப் பார்த்துக் கேட்கிறேன்... நீ குடித்த சோடாவில் உப்பு இருந்ததா?’’
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.



செல்போன்ல எதையோ பார்த்துட்டு தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்கார்..?’’
‘‘அவரோட பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்குக்கூட மீம்ஸ் போட்டுட்டாங்களாம்!’’ 
- ரியாஸ், சேலம்.

தலைவருக்கு ஞாபகசக்தி ரொம்ப அதிகம்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘அவர் வாங்கின முதல் குற்றப் பத்திரிகையோட பக்கங்கள் எத்தனைன்னு இப்பகூட சொல்றாரே!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘பெண்ணை மட்டும் பார்த்துட்டுப் போறோம்... எங்களுக்கு பஜ்ஜி போட வேண்டாம்!’’
‘‘ஏன்?’’
‘‘உங்க வீட்ல பஜ்ஜி சுமாராத்தான் இருக்கும்னு தரகர் சொல்லித்தான் கூட்டிட்டு வந்தார்!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.

தலைவர் ஏன் சோகமா இருக்கார்..?’’
‘‘அவர் மைக் டெஸ்ட்டிங் பண்ணினதுக்கே கூட்டம்
கலைஞ்சிடுச்சாம்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

‘‘அவர் என்ன கேட்டார்னு இப்படி திட்டறீங்க ஜோசியரே..?’’
‘‘இருபத்தேழு நட்சத்திரத்தில் முன்னணி ஸ்டார் எதுன்னு கேட்கறார்யா..!’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.

‘‘புதுப்புது ‘ஆப்’கள் மூலம் இணையத்தில் கிண்டல் செய்தாலும் கலங்காமல் கட்சியின் கட்டுக்கோப்பான ‘ரூஃப்’ ஆக விளங்கும்
தலைவர் அவர்களே...’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.