வெல்வெட் கேக்!



‘பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்’ கட்டுரை அருமை. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தோற்பவர்களை கேலி செய்யாமல், அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும் பாதையில் அடியெடுத்து வைக்க வேண்டும்.
- கே.ராதாகிருஷ்ணன், சென்னை-33.

‘போகன்’ பட ஸ்டில்களில் ரெட் வெல்வெட் கேக்காய் பளீரென தகிக்கிற ஹன்சிகாவின் அழகே தனி.
-ஜெ.சந்திரசேகர், திருச்சி.

‘சட்டம் திருந்தினால் சாலை திருந்துமா?’ படித்ததும் பகீர் என்றது. ‘உலகின் மொத்த வாகனங்களில் ஒரு சதவீதம்தான் இந்திய சாலைகளில் ஓடுகின்றன. ஆனால், உலகின் பத்து சதவீத சாலை விபத்துகள் இந்தியாவில்தான் நிகழ்கின்றன’ என சொல்லியிருப்பது அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
- வ.கீதா முரளி, கோவை.

‘ஒரு கேள்வி ஒரு பதில்’ பகுதி செம நச். யதார்த்தம் மின்னும் கோவை சரளா, நட்பு விரியும் விஜய், காமெடி ததும்பும் சுந்தர்.சி.யின் பதில் என ஒவ்வொன்றும் சுவை மிளிர்ந்தது.
- எம்.கிருஷ்ணராம், திருவண்ணாமலை.

‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் போகிறீர்கள்? என்று இந்த சமூகத்தில் உள்ள வக்கிரம் பிடித்த ஆண்களை கேட்க விரும்புகிறேன்’ என டவுன்லோட் மனசில் அ.வெண்ணிலா கேட்க விரும்பிய கேள்வியே நம் கேள்வியும்!
- கவிதா, பாளையங்கோட்டை.

கனவு மட்டுமில்லாமல் அதை செயலாக்க மெனக்கெட்டு சாதித்த இளம் விஞ்ஞானிகளின் செய்தி சக்கரைக்கட்டியாய் இனித்தது.
- எஸ்.மோகனசுந்தரம், புதுச்சேரி.

பாசிட்டிவ் கான்செப்ட்டில் டூடுலில் நம்ம சென்னையின் இடங்களா? ஐடியா பிடிப்பதிலேயே மைலேஜ் கூட்டுகிறாரே ராம். நல்லா வருவீங்க சார்!
- இ.ஹேமந்த் சின்னு, காரைக்குடி.

ஆரோக்கியமும் அக்கறையும் கொண்ட பகுதி என ‘செகண்ட் ஒப்பீனியனை’ தாராளமாகச் சொல்லலாம். அதுவும் இந்த வாரம் ஆஸ்துமாவை ஓரங்கட்ட டாக்டர் சொல்லியிருக்கும் தகவல்கள் அத்தனையும் பயனுள்ளவை. 
- எல்.மணிகண்டன், சிவகாசி.

நா.முத்துக்குமாரின் மறைவை யாராலும் நம்பமுடியவில்லை. அவர் நமது ‘குங்குமம்’ இதழில் எழுதிய ‘நினைவோ ஒரு பறவை’யைத் தொடந்து படித்து வந்த எனக்கு இது ஈடுசெய்யமுடியாத இழப்பாகவே தெரிகிறது. 
- டி.கே.கவிதா, ஈரோடு.

கடைசி பக்க ராதிகா ஆப்தேவின் படமும் நியூஸும் அடடா ரகம். ‘பார்ச்டு’ படத்தின் க்ளிப்பிங்ஸையும் கொடுத்திருந்தால் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்போம்!
- குமரேசன், திண்டுக்கல்.