பெண்



போன வாரம் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். சூட்டிகையா ஒரு பொண்ணு, வந்தவங்களையெல்லாம் ரொம்ப அக்கறையா கவனிச்சிக்கிட்டிருந்தா. யோசனை எழுந்தது. என் பையனுக்குப் பார்க்கலாமா? அருகில் வந்து காபி கொடுத்தாள். டெஸ்ட் வைத்தேன். ‘‘ஆத்திக்க இன்னொரு டம்ளர் கிடைக்குமா?’’ ‘‘நானே ஆத்தித் தர்றேன் அங்கிள்!’’ என்ன ஒரு பணிவு! ‘‘படிக்கிறியாம்மா?’’

‘‘பி.எஸ்சி. இந்த வருஷம்தான் முடிச்சேன்!’’ ‘‘உங்க அப்பா, அம்மா எங்கேம்மா?’’ ‘‘வரலே! என்ன விஷயம் அங்கிள்?’’ ‘‘கல்யாண விஷயம் பேசணும்!’’ ‘‘யாருக்கு அங்கிள்?’’ ‘‘என் பையனுக்குத்தாம்மா. பி.டெக் படிச்சிட்டு மாசம் 50 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ரொம்ப நல்லா இருப்பான்!’’

‘‘அதுக்கென்ன அங்கிள்... தாராளமா பண்ணிடலாம்!’’ பையனைக்கூட பார்க்காமல் சரின்னு சொல்லிட்டாளே... ரொம்பவே நல்ல பொண்ணுதான். ‘‘இல்லேம்மா... கல்யாண விஷயம்னா பெரியவங்களைப் பாத்து பேச வேண்டாமா?’’ ‘‘இதுலே இருக்கற நம்பருக்குப் பேசுங்க’’ என்றபடியே ஒரு விசிட்டிங் கார்டைத் தந்தாள். ‘ஏ.கே. ஈவென்ட் மேனேஜ்மென்ட்... கல்யாணம் மற்றும் எந்த விழாக்களுக்கும் எங்களை அணுகுங்கள்!’

-ஸ்ரீஅருண்குமார்