ஸ்லீவ்லெஸ் சிலுக்கு!



காவிரி நீர் பிரச்னை அரசியலாக்கப்படுகிறதே தவிர, விவசாயிகளின் வயிற்றைக் காப்பாற்ற அணுவளவும் உதவுவதில்லை. இந்நிலையில் விவசாயிகள் நேரடியாக கர்நாடக முதல்வரையும் கர்நாடக விவசாயிகளையும் சந்தித்து உதவி கேட்டது ‘நமக்கு நாமே’ முடிவு. உச்ச நீதிமன்றமாவது தண்ணீர் பெற்றுத் தருகிறதா என்று பார்ப்போம்.
- டி.சீனா மூர்த்தி, திருப்பூர்.

பாயும் ‘கிடாரி’ சசியின் ஓபன் டாக்... நிகிலாவின் விருப்ப நெருக்க படங்கள்... இரண்டும் கலந்து சுறுசுறு வேகத்தில் மனதை ஈர்த்தன.
- ப.கௌதமி, ஈரோடு.

ஸ்லீவ்லெஸ் சிலுக்காக மனதை உலுக்கி தன்  பக்கம் இழுக்கிறார் ‘விஜய் 60’ நாயகி கீர்த்தி சுரேஷ். விஜய் பட அப்டேட்  நியூஸ் மாஸ் காட்டுது பாஸ்!
- கே.ஜெயராமன், சென்னை-4.

டிஜிட்டல் மனங்கள் எப்படி சுவாரசிய காட்சிகளுக்காக தவிப்பில் கிடக்கின்றன என்பதை நறுக்கென குட்டிச் சொன்னதற்கு நூறு க்ளாப்ஸ்.
- இ.சிவநாதன், திருத்தணி.

லேசர் முறையில் மனதை மயக்கும் ச்சோ ஸ்வீட் டாட்டூ ட்ரெண்டில் எது பாப்புலர்? எது டாப்? என விளக்கியதில் குங்குமம் ஸ்பெஷல் டீன் ட்ரீட்டாய் இனித்தது.
- கோ.ரகுநாதன், கோவை.

புறநகர் ரயில்களுக்கான ஆப் வசதி ரயில் நிலையங்களில் நெரிசல் குறைப்பதோடு நேரத்தையும் சேமிக்கும் சூப்பர் சேவர் வழிமுறை.
- சி.லட்சுமிபதி, தூத்துக்குடி.

டிசைனிங்கில் டிக்டேட்டராக வலம் வரும் பவன்குமாரின் போஸ்டர் கைவண்ணத்திற்கு அவரது கன்னத்தில் திருஷ்டிப்
பொட்டுதான் வைக்கணும்.
- ஆர்.ஜீவநதி, திருச்சி.

செய்கூலி சேதாரமில்லாமல் மனிதர்களை அணுகுவது குறித்த பாலபாடத்தை அம்மாவைப் போன்ற
அக்கறையுடன் தருகிறது ‘உறவெனும் திரைக்கதை’ தொடர்.
- க.மணிவேலன், திண்டுக்கல்.

‘கமென்ட் கோயிந்து’வின் அத்தனை கமென்ட்களும் தாறுமாறு. சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கின்றன.
- கி.ராஜவேல்கணபதி, தர்மபுரி.

தன் நண்பனின் உடல்நலம் காக்க கழிவறை கட்டிய தேத்தாகுடி கிராம நண்பர்கள் உண்மையிலேயே உயிர் காக்கும் நண்பர்கள்தான். அசர வைக்கும் தோழமை வாழ்க.
- மோ.திலகவதி, சென்னை-73.

பப்ளி தேவதை ஹுமா குரேஷி இப்படி அம்சமான டிரஸ்ஸில் அட்வைஸ் செய்தால் போதுமே! கேட்காமலா இருப்போம்!
- கு.நவநீதன், திருச்செந்தூர்.