பயணக் குறிப்புஇப்பாதை எனக்குப் புதிதல்ல
பலமுறை இதில்
பயணித்திருக்கிறேன்
பெரும்பாலும் நிதானமாய்
எப்போதாவது வேகமாய்
 
சரளைக்கற்கள்
எங்கெனவும்
வேகத்தடையின்
அமைப்பும்
எனக்கு அத்துப்படி
 

முதன்முதலில்
பார்த்தபோது
பள்ளத்தின்
அருகில் பதறியது
இன்னும் நினைவிருக்கிறது

உன் கை பிடித்து
அதை லாவகமாய்க்
கடந்தேன்
பிறகு வந்த நாள்களில்
பள்ளத்தைத் தவிர்த்த பயணம்
எங்கு போக
வேண்டியிருந்தாலும்
அந்த வழிதான் எனும்படி
அவ்வளவு பிடித்திருந்தது

- பார்வதி