டிஜிட்டல் ஆவணங்கள் போதும்!சாலையில் டிராஃபிக் போலீஸ் கைகாட்டி வண்டிக்கான ஆவணங்களை சரிபார்க்க கேட்டால், அதனை டிஜிட்டலாகக் காட்டினால்கூட போதும் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால் ஒரிஜினல் ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்து திரும்பப் பெறமுடியாமல் தடுமாறும் வேதனை இனியில்லை. ஐடி சட்டப்படி (1988, 2000) digilocker, mparivahan உள்ளிட்ட ஆப்ஸ்களில் சேமித்துள்ள வாகனங்களுக்கான உரிய ஆவணங்களைக் காட்டினால் போதுமானது. போலீசார் தம்மிடமுள்ள மொபைல்போன் மூலம் டிஜிட்டல் ஆவணங்களிலுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தாலே அதனை சரிபார்க்க முடியும். இப்போது டிஜிலாக்கரை அனைத்து போன்களிலும் எளிதில் தரவிறக்கி பயன்படுத்தமுடியும் என்றாலும் பரிவாகன் அப்ளிகேஷன் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும்படி இன்னும் ரெடியாகவில்லை.

-ரோனி