ஹேண்ட் பேக் ரகசியம்!



காலம் காலமாக கணவனாகவே இருந்தாலும் சரி, தங்களுடைய ஹேண்ட்பேக்குகளை மட்டும் தொட்டால் பெண்கள் கோபமாகிவிடுவார்கள். அதனால்தானோ என்னவோ ஹேண்ட்பேக் தேர்வின்போது மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள்.‘‘இது போதாது. இன்னும் பயிற்சி வேண்டும்...’’ என்கிறார் டிசைனர் யோகா கந்தசாமி. ‘‘ஆண்கள் நினைக்கிற அளவுக்கு அது பெரிய சீக்ரெட் எல்லாம் இல்ல. மாதவிடாய் காலத்துல பயன்படுத்த நாப்கின்ஸ், அப்புறம் வீட்டுச் செலவுக்கு பணம், கொஞ்சம் மேக்கப் அயிட்டம்ஸ்... இதுதான் பெரும்பாலான பெண்களோட ஹேண்ட் பேக்குல இருக்கும்...’’ என்ற யோகா,

ஹேண்ட்பேக் டிரெண்ட், தேர்வு செய்யும் முறை, எந்த உடைகளுக்கு என்ன ஹேண்ட் பேக்... என விளக்க ஆரம்பித்தார்.‘‘16ம் நூற்றாண்டுல ரோம் மக்கள் துணிகள்ல ஹேண்ட் பேக் பயன்படுத்தினாங்க. 18ம் நூற்றாண்டுலதான் பெரிய பெரிய பிராண்ட் பேக்ஸ் வர ஆரம்பிச்சது. 1930க்கு அப்புறம் பெண்களுடைய அத்தியாவசியப் பொருட்கள்ல ஒண்ணா ஹேண்ட்பேக் மாறிடுச்சு! டெய்லி ஆபீசுக்கு துணிகளாலான ஹேண்ட் பேக்கை பயன்படுத்துங்க. இல்லைனா துவைக்கிற மெட்டீரியல்ல வாங்குங்க. அதுதான் நல்லது. கொஞ்சம் ராயலான பேக் வாங்கப் போறீங்கனா அதுலதான் கவனம் தேவை.

நாம பெரும்பாலும் பண்ற தப்பு நமக்குப் பிடிச்ச கலர்ல வேணும்னு பிங்க், மஞ்சள், சிவப்பை தேர்வு செய்யறோம். ஆனா, இதை எல்லா டிரெஸ்ஸுக்கும் பயன்படுத்த முடியாது. அதுவே டிரெஸ் வாங்கறப்பவே ஹேண்ட் பேக் வாங்கறீங்கனா நோ ப்ராப்ளம். மத்தபடி ‘என்கிட்ட மொத்தமாவே ரெண்டு மூணு பேக்ஸ்தான் இருக்கு’னு சொல்ற பெண்கள் முடிஞ்ச வரை கருப்பு, மெயின்டெயின் பண்ண முடியும்னா வெள்ளை அல்லது லெதர் கலர் வாங்குங்க. இது எல்லா உடைகளுக்கும் மேட்ச்சா இருக்கும். இன்னொரு விஷயம், இந்த மூணு கலரை அடிப்படையா கொண்ட மூணு செப்பல்களும் அவசியம்.

நீங்க ஆக்ஸசரிஸ்ல எவ்வளவு மேட்ச் செஞ்சாலும் காலணியும், ஹேண்ட்பேக்கும் ஒரே கலர்ல இருக்கறது முக்கியம்! அப்புறம் ஹேண்ட் பேக் வாங்கினா மட்டும் போதாது. அதைப் பாதுகாக்கவும் செய்யணும். ஒரு ஃபங்ஷனுக்கு பயன்படுத்திட்டு பிறகு இன்னொரு ஃபங்ஷனுக்குதான் யூஸ் செய்யப் போறீங்கனா அதை ஒரு நியூஸ் பேப்பர் அல்லது துணி வெச்சு சுத்தி வைங்க. இது கூட பீரோவுல கற்கள், எம்பிராய்டரி உடைகளை வைக்கக் கூடாது. அப்படி செஞ்சா பேக் டேமேஜ் ஆகிடும். உங்க ஹேண்ட்பேக் டிசைன்ல கூர்மையான அல்லது மெட்டல் டிசைன்கள் இருந்தா முடிஞ்சவரை அந்த டிசைன்களை கழட்டி தனியா வைங்க.

தேவைப்படறப்ப மாட்டிக்குங்க. இல்லைன்னா உடைகளுக்கும் ஆபத்து, பேக்ஸுக்கும் ஆபத்து. லெதர் பேக்னா எப்படி ஷூக்கு பாலிஷ் போடுவோமோ அப்படி லெதர் பேக்குக்கு இருக்கிற லெதர் பாலிஷ் & கிளீனரை யூஸ் பண்ணுங்க. நெருங்கிய தோழியா இருந்தாலும் ஹேண்ட்பேக்கை ஓசில கொடுக்காதீங்க. காம்பாக்ட் பவுடர், வாட்டர் பாட்டில், லிப்ஸ்டிக், கிரீம்... இப்படி சுலபமா கொட்டுற அயிட்டங்களை தனியா கவர் போட்டு வைங்க. முக்கியமா லன்ச்சுக்கு தனி பேக் பயன்படுத்துங்க...’’ என்ற யோகா என்ன உடைக்கு எந்த பேக் என்றும் டிப்ஸ் கொடுத்தார்.  

சல்வார், புடவைனா ஷார்ட் ஹேண்ட்பேக், அல்லது கிளட்ச். வெஸ்டர்ன் ஷார்ட் கவுன், காக்டெயில் கவுன்... இதுக்கெல்லாம் ஷோல்டர் ஹேண்ட்பேக். ஜீன்ஸ், ஷார்ட்ஸ் மாதிரியான உடைகளுக்கு ஸ்லிங் பேக் அதாவது நீண்ட செயின் அல்லது பெல்ட் இருக்கிற ஹேண்ட் பேக். லாங் பார்ட்டி கவுன், லெஹெங்கா, கிராண்ட் சல்வார்னா யோசிக்காம கிளட்ச் போடுங்க. ஏன்னா, உங்க டிரெஸ்ஸே ஹெவியா இருக்கும். இதுல ஹெவியான ஹேண்ட் பேக்குனா கஷ்டம்.

இந்த கிளட்ச் ஹேண்ட்பேக், கிராண்ட் உடைகளுக்கு மேட்ச்சிங்கா நிறைய வெரைட்டில கிடைக்குது. உங்க உடைகளோட டிசைன்ஸ், எம்பிராய்டரிகளுக்கு ஏற்ப கிளட்ச் வாங்கலாம். வயசு கம்மியா தெரியணும்னா பேக் பேக்தான்! பொம்மைகள், ஸ்மைலிகள் அல்லது மினியன்ஸ் டிசைன்ல பேக் பேக் வாங்கினா டிரெண்டியா தெரிவீங்க. ஜீன், ஷார்ட்ஸ், அல்லது 3/4 பேண்ட், ஷார்ட் லூஸ் கவுன்... இதுக்கெல்லாம் ஸ்னீக்கர் ஷூ அப்படியே ஹை பன் ஹேர்ஸ்டைல் போட்டு பேக் பேக்-குடன் போனா... மாடர்ன் கேர்ள் நீங்கதான்!’’ என்கிறார் யோகா கந்தசாமி.                

- ஷாலினி நியூட்டன்