குற்றங்களை விளம்பரம் செய்யலாம்!



குற்றப்பின்னணி கொண்ட எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் மீதான குற்றவழக்குகளை கட்சிக்கு தெரிவிப்பதோடு நாளிதழ்களிலும் விளம்பரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் விநோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

தேர்தல் சட்டப்படி படிவம் 26 என்பதை நிரப்புவதோடு தேர்தல் பிரசாரத்தின்போது குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தங்கள் குற்றங்களை டாப் 3 பத்திரிகைகளில் மூன்று வெவ்வேறு நாட்களில் விளம்பரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் ஐடியா கொடுத்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் புதிய விதிமுறைகள் அமுலாகின்றன.