கவிதை வனம்



பறவையாதல்

நான் பறவைதான்
எனக்கான இறக்கைகள்
உனைக் காணும்போது
முளைக்கிறது
உன் சமீபிப்பில்
தன்னியல்பாய் விரிகிறது
உன் புன்னகைச் சாரலில்
சிறகடித்துக்கொள்கிறது

பிறிதொரு சமயம்
அலகூட்டும் பறவையாய்
உன் இதழ் முத்தத்தால்
பறக்க எத்தனிக்கிறது
இவ்வுலகை மறந்து
உன்னோடு இருத்தல்  
நம் வானில்
பறத்தலின்
குறியீடாகிறது.

- ச.புவனேஸ்வரி

நிசப்தம்

இரவு சரீரத்திற்கான காடு,
தீப்பொறி உரசி தகிக்கும்
கனலோடு எரிந்து எரிந்து
முடிவில் குவியும் சாம்பல்
குவியலிலிருந்து
தப்பும் ஒற்றைப் பூ.

- சீதா