திமிரு புடிச்சவன்



விஜய் ஆண்டனியின் தம்பி உள்ளூர் தாதாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, அண்ணனைக் கடுப்பேத்துகிறார். போலீஸாக இருந்தாலும் தன் தம்பியை  மீட்க முடியாமல் போய்விட, தாதாவின் கைக்குள் இருக்கிற மற்ற சிறுவர்களையும் கைப்பற்ற நினைக்கிறார். இந்த முயற்சிகள் கைகூடியதா என்பதே  ‘திமிரு புடிச்சவன்’.

விஜய் ஆண்டனி இதில் முழுக்க மாஸ் மசாலாவைக் கொண்டு வந்திருக்கிறார். உடலை முறுக்கி ஆர்ம்ஸ் ஏற்றி அடியாட்களைப் பந்தாடும் காட்சிகளில்  தியேட்டர் அதிர்கிறது. ஹீரோயின் நிவேதா பெத்துராஜ். நெடுநெடு உயரத்தில், கிடுகிடு அழகில் கிறங்கடிக்கிறார்.படத்தின் கரு, ஹாட் டாப்பிக்காக இருந்தும் யூகிக்கும் காட்சிகள் மைனஸ்.இன்னும் கவனமாக இருந்திருந்தால், இந்த ‘திமிரு புடிச்சவனை’க்கூட பிடித்திருக்கும்.

குங்குமம் விமர்சனக்குழு