ரீடர்ஸ் வாய்ஸ்
குறும்பு!
 ரசிகர்களின் ரசனைக்கு தீனிபோடும் நல்ல கதைகளைத் தேடி தயாரிக்கும் கோட்டபாடி ராஜேஷின் கலை ஆர்வம் ஆச்சர்யம் தந்தது. - சங்கீதசரவணன், மயிலாடுதுறை; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; லட்சுமி நாராயணன், வடலூர்; முரளிதரன், மதுரை; சத்தியநாராயணன், அயன்புரம்.
முத்தம், முதுகுவலிக்கான படங்கள் ஆஹா, ஓஹோ ரேஞ்ச் ப்ரோ! - அருண் அப்பன், திருநெல்வேலி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மக்களிடம் இவ்வளவு ரிசர்வ்டு டைப்பாக இருப்பது இந்தியாவுக்கே ஆபத்து! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; மனோகர், கோவை; புகழேந்தி, மதுரை.
இறந்த பெண்ணின் நினைவாக ஓய்வூதிய பணத்தில் மருத்துவர் ராமேஷ்வர் பேருந்து இயக்கும் செய்தி, நெஞ்சை நெகிழவைத்தது - க.நஞ்சையன், பொள்ளாச்சி; மனோகர், கோவை; முருகேசன், கங்களாஞ்சேரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; பிரீத்தி, செங்கல்பட்டு.
பகவானாக சாதாரண இந்தியர் எப்படி உருவானார் என்பதற்கான வலுவான காரணங்களை யுவகிருஷ்ணா அழகாகக் கூறியுள்ளார். - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
இட ஒதுக்கீடு தீர்வுக்கு நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்புவதே தீர்வு என்று சொன்ன கட்டுரை அசத்தல். - கைவல்லியம், மானகிரி; முருகேசன், கங்களாஞ்சேரி.
பிரெஞ்சு கிஸ் குறித்த அட்வைஸ்களும், நெருக்கமான படங்களும் ரொம்ப குறும்பு சார்! - மயிலை கோபி, அசோக்நகர்; லட்சுமி நாராயணன், வடலூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; கைவல்லியம, மானகிரி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சத்தியநாராயணன், அயன்புரம்.
டிராம் வண்டி பயணத்தின் நினைவுகளை நிகழ்காலத்தில் ஏற்படுத்தியது தலபுராணத்தின் டிராம்வண்டியின் கதை. - தா.சைமன்தேவா, விநாயகபுரம்; இனியா, கங்களாஞ்சேரி; பிரீத்தி, கங்களாஞ்சேரி; சத்தியநாராயணன், அயன்புரம்; புகழேந்தி, மதுரை; பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
தங்களுடைய எல்லைக்குள் செயல்பட்டால் பிரச்னை கிடையாது என்ற முன்னாள் நீதிபதி சந்துருவின் கருத்து சத்தியம்! - மனோகர், கோவை; புகழேந்தி, மதுரை.
ஆரோக்கியமான உணவுப்பொருளான கருப்பட்டி மிட்டாயை கைதட்டி வரவேற்போம். - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; ராமகண்ணன், திருநெல்வேலி; தேவா, கதிர்வேடு; வளையாபதி, தோட்டக்குறிச்சி.
மன்னருக்கு நளபாகம் சமைத்து வந்த பாரம்பரிய சுவையில் நவாப் பிரியாணி செம தூள்! - எம்.மைதிலி, கங்களாஞ்சேரி; சாந்தா, மதுரை.
உலகில் மொத்த கதைகளே ஏழு, சூழல்கள் 36 என சொல்லி ஒருவரி புரட்சி செய்துவீட்டீர்கள்! - ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்; ஜானகி ரங்கநாதன், சென்னை; மனோகா, திருச்சி.
|