இமாலயத்தில் வயாக்ரா!
இந்தியாவின் இமாலயம், நேபாளம், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் பூஞ்சைக்காளான் வகையைச் சேர்ந்த யார்ச்சகும்பா (Ophiocordyceps sinensis), சீன மருத்துவத்தில் தங்கத்திற்கு நிகரான மதிப்பு கொண்டது. ஆண்மைக்குறைவு முதல் புற்றுநோய் பிரச்னைகளைத் தீர்ப்பது வரை சர்வரோக நிவாரணியாக யார்ச்சகும்பாவை சீனாவிலும், நேபாள மருத்துவ வட்டாரங்களிலும் கருதுகிறார்கள்.

கிராக்கி இருந்தாலும் இதன் உற்பத்தி மிகக் குறைவாக உள்ளதற்குக் காரணம், விற்பனைக்காக மக்கள் இதனை அதிதீவிரமாக அறுவடை செய்வதும் பருவநிலை சூழல்கள் மாறுவதும்தான் என தட்பவெப்ப ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
3 ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் வளரும் இந்த பூஞ்சைத் தாவரம் வளர 32 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தேவை என்றாலும் பனியால் மண் உறைந்துவிடக்கூடாது என்பது முக்கியம். திபெத், பூடான் பகுதிகளில் பத்தாண்டுகளில் ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் அதிகரித்து வருவது இமாலய வயாக்ரா வளர்ச்சி பாதாளத்தில் விழக்காரணம் என ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை தெரிவிக்கிறது.
ரோனி
|