அஞ்சு பன்ச்-நயன்தாரா
 *இளகிய மனசு. உதவியாளர்களை மனதுக்கு நெருக்கமாக வைத்திருப்பதால் துரோகம், ஏமாற்று என்பதற்கு வழியே இல்லை. *நண்பர்கள் வட்டாரம் இப்போது சிவகார்த்திகேயன், அனிருத் உட்பட 15 பேர் குழுவாக இருக்கிறது.
*சாப்பாட்டுப் பிரியை அல்ல. வீட்டில் சப்பாத்தி, சாண்ட்விச், சாலட், சூப் மட்டுமே. சாதம்... மூச்!
*கல்யாணங்களுக்கு விருப்ப உடை ஸ்லீவ்லெஸ் ரவிக்கை, புடவை. அவரே ஸ்டைலை உருவாக்கி புழக்கத்தில் விடுவார். ஆனால், அதைத் தொடர்ந்து பின்பற்ற மாட்டார்.
*விழாவில் பேசச் சொன்னால் ஓடி ஒளிவார். சிரித்து சமாளிப்பார். அப்படியும் கொண்டுவந்து நிறுத்திவிட்டால் உற்சாகமாக ஐந்து நிமிடம் பேசுவார்.
நன்மதி
|