அலாரம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

ரஜினி பிறந்தநாளுக்கு கிடைத்த ஸ்பெஷல் இனிப்புகளாக ‘பேட்ட’ தகவல்கள் இனித்தன.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; லட்சுமி செங்குட்டுவன், வேலூர்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; முருகேசன், கங்களாஞ்சேரி; சேகர், பெங்களூரு; ராஜ்குமார், குன்னூர்; நரசிம்மராஜ், மதுரை.

சினிமா வேட்கை குறையாமல் பேசிய ‘பசி’ துரையின் பேட்டி நெஞ்சைவிட்டு அகலவில்லை.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; அக்‌ஷயாமாறன், திருவண்ணாமலை; மனோகர், கோவை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கௌரிபாய், பொன்னேரி; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; லட்சுமி வெங்குட்டுவன், வேலூர்; சேகர், பெங்களூரு; ராஜ்குமார், குன்னூர்; சைமன்தேவா, விநாயகபுரம்; வேல்முருகன், திருநெல்வேலி.

உரிமைகளை மீட்க தெருவில் இறங்கிய விவசாயிகளின் தோழனாக பிரச்னைகளை பேசிய குங்குமத்திற்குப் பாராட்டுகள்.
- பி.சாந்தா, மதுரை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; மனோகர், கோவை. வளையாபதி, தோட்டக்குறிச்சி; மனோகா, திருச்சி; நஞ்சையன், பொள்ளாச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நரசிம்மராஜ், மதுரை; ராஜ்குமார், குன்னூர்.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதை கட்டாயமாக்கும் கேஷ்பேக் ஆஃபர் பற்றி அலார கட்டுரை எழுதியது அத்தியாவசிய அவசரம்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கைவல்லியம், மானகிரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மயிலை கோபி, அசோக்நகர்.

சாதி மத பேதமில்லாத இசைக்கலைஞர் ஓ.எஸ்.அருண் மீது மத சாயத்தை பூச முயல்வது ஏற்கமுடியாத அணுகுமுறை.
- ஆர்.மீனாட்சி, திருமுல்லைவாயில்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.

வெனிசுலாவின் வீழ்ந்த பணமதிப்பு செய்தி வேதனை தந்தது.
- டி.நரசிம்மராஜ், மதுரை; அண்ணா அன்பழகன்,அந்தணப்பேட்டை; கைவல்லியம், மானகிரி.  

 சித்த மருத்துவத்தில் விளையாடும் போலிகளை சரவணசந்திரன் துகிலுரித்துக் காட்டுவது கிலி தருகிறது.
- மனோகர், கோவை; ஜானகி ரங்கநாதன், சென்னை. மாணிக்கவாசகம், கும்பகோணம்.

பாசவலையில் பின்னப்பட்ட கதையாக ‘பை’ நெஞ்சை உலுக்கியது நிஜம்.
- மயிலை கோபி, அசோக்நகர்; பூதலிங்கம், நாகர்கோவில்.   

பெண்களின் வேலையை ஆண்களும் ஏற்கும்போது ஆடை அணிவதில் தப்பில்லை!
- பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

ஹோம் அக்ரி தொடர், தாவரங்கள், கோள்கள் என பரந்துபட்ட தகவல்களை இணைத்து பிரமிக்க வைத்தது.
- ஆர்.சண்முகராஜ், திருவொற்றியூர்.