காஸ்ட்லி டைவர்ஸ்!விவாகரத்து என்றால் ஜீவனாம்சம் இல்லாமலா..? இந்த டைவர்ஸிலும் அது டிட்டோ. என்ன, தொகைதான் எக்கச்சக்கம். அதனாலேயே உலகின் விலை உயர்ந்த விவாகரத்து என இந்த டைவர்ஸ் அழைக்கப்படுகிறது!1993ம் ஆண்டு ஜெப் பெசோஸ் - மக்கின்சி இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். மகிழ்ச்சியான வாழ்க்கை. ஜாலியாக வாழ்ந்தார்கள்.

யார் கண் பட்டதோ, சில ஆண்டுகளில் பிரிந்திருந்தவர்கள் இப்போது அதிகாரபூர்வமாக விவாகரத்துக்கு கையெழுத்திட்டுள்ளனர்.அமெரிக்க சட்டப்படி கணவனின் சொத்தில் 50%தை ஜீவனாம்சமாக மனைவி பெறமுடியும். என்றாலும் மக்கின்சி, ‘அவ்வளவு எல்லாம் வேண்டாம். கணவரின் சொத்தில் 25% போதும்...’ எனச் சொல்லிவிட்டார்.

ஜெப் பெசோஸ் மறுக்கவில்லை. சம்மதித்து விட்டார்.ரைட். 25% வழியாக ஜீவனாம்சமாக மக்கின்சி பெற்ற தொகை எவ்வளவு தெரியுமா...? 32 பில்லியன் டாலர்ஸ்! இந்திய மதிப்பில் ரூ.2.5 லட்சம் கோடி!லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், மனைவிக்கு இவ்வளவு பெரிய தொகையை ஜீவனாம்சமாகக் கொடுத்த ஜெப் பெசோஸ் யார் தெரியுமா..?  ‘அமேசான்’ நிறுவனத்தின் CEO!                                           

காம்ஸ் பாப்பா