அஞ்சு பன்ச் - சிவகார்த்திகேயன்*ஒரு படம் முடிந்தபிறகே அடுத்தது என்றிருந்தவர், இப்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்கிறார்.

*அனிருத் நெருங்கிய நண்பர். இருவருக்கும் அரிதாகக் கிடைக்கிற நேரங்களில் அவர்கள் பேச்சு நேரம் காலம் அறியாமல் நீளும்.

*பார்ட்டிகளுக்கு செல்வதில்லை. அதனால் நட்புகளை இழந்தாலும் பரவாயில்லை என்பார். மறைந்த அப்பாவின் விருப்பமும் இந்த ஒழுங்கிற்குக் காரணம்.

*அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தவர் என்பதால் காவல்துறையை அவமதிக்கிற காட்சிகளில் நடிக்கமாட்டார்.

*தன்னை சினிமாவிற்கு அறிமுகம் செய்த இயக்குநர் பாண்டிராஜ் மீது தனிப்பிரியமும் மரியாதையும் உண்டு.

நன்மதி