சூப்பர் சாய்ஸ்!‘சூப்பர் டீலக்ஸி’ன் ஐந்து பாய்ஸும் சூப்பர் சாய்ஸ்! அவர்களின் அருகிலிருந்து உரையாடிய கலகலப்பான அனுபவத்தைக் கொடுத்த கட்டுரை சூப்பர்.
- பிரேமா பாபு, சென்னை; ஜெயசந்திர பாபு, மடிப்பாக்கம்; மியாவ்சின், கே.கே.நகர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மயிலை.கோபி, அசோக் நகர்; நஞ்சையன், பொள்ளாச்சி; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; அ.யாழினி பர்வதம், சென்னை; கருணாகரன், போரூர்.

முத்தான மூன்று பெண் வேட்பாளர்களின் நேர்காணல்கள் முக்கனிகளாக இனித்தன. வாரிசு அரசியல் பற்றிய தமிழச்சி தங்கபாண்டியனின் கருத்துகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும்
- மாளவிகா ரமேஷ், மாம்பலம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; பப்பு, அசோக் நகர்; சந்திரமதி, சென்னை; சரண் சுதாகர், வேளச்சேரி.

‘மிஷன் சக்தி’ பற்றிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லியது மட்டுமல்லாமல் அதன் தீமையையும் சுட்டிக்காட்டியதுதான் அந்தக் கட்டுரையின் ஸ்பெஷல்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மாணிக்கவாசகம், கும்பகோணம்; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கலிவரதன், கீழ்க்கட்டளை; ஆத்மநாதன், ஆற்காடு.

அரசியல் தலைவர்கள் பிரசாரம் செய்ய ‘வாகாக’ வாகனங்களைத் தயாரித்தளிக்கும் நிறுவனம் குறித்த கட்டுரையும் படங்களும் பிரமாதம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; அ.யாழினி பர்வதம், சென்னை; வெ.லட்சுமி நாராயணன், வடலூர்; மனோகர், மேட்டுப்பாளையம்.

நடிகை தன்யா ஹோப்பை அவசியம் அரசியலுக்கு வரச் சொல்லுங்க. ‘கவர்ச்சி’ அரசியலைக் காணக் காத்திருக்கிறோம்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை; கவுரிநாத், பரங்கிமலை; புகழ்மதி, ஆதம்பாக்கம்.

இறந்தவர்களைத் தோண்டியெடுத்து அலங்காரம் செய்து அழகு பார்க்கிற டொராஜன் பழங்குடி
களின் விசித்திரச் சடங்குகள் ‘த்ரில்’ அனுபவம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்; இலக்சித், மடிப்பாக்கம்; ஆர்.ஜெ.சி, சென்னை; சந்திரமதி, சென்னை.

இருநூறாவது வயதை நோக்கி வெற்றி நடை போட்டு வரும் ‘மெட்ராஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ குறித்த ‘தலபுராணம்’ சென்னையின் படிப்படியான வளர்ச்சியை அருமையாக எடுத்துச் சொல்கிறது.
- புகழ்மதி, ஆதம்பாக்கம்; அ.யாழினி பர்வதம், சென்னை; மனோகர், திருநெல்வேலி; சந்தீப், திருச்சி; செல்வராஜ், விழுப்புரம்; ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
 
ரீடர்ஸ் வாய்ஸ்