செல்ஃபி எடுத்தால் மரண தண்டனை!



ம்ஹும். இந்தியாவில் அல்ல. தாய்லாந்தில்! மாய் காவோ கடற்கரைப் பகுதியை ஒட்டி ஒரு விமானநிலையம் இருக்கிறது. போதாதா..? பீச்சுக்கு அருகில் இருப்பதால் விமானம் ஏறுவதும், இறங்குவதும் அட்டகாசமாக இருக்கும்.அவ்வளவுதான். சுற்றுலாப் பயணிகள் ஆச்சர்யத்துடன் இதைப் பார்த்து இஷ்டத்துக்கு செல்ஃபி எடுக்க ஆரம்பித்தனர்.

இதனால் விமான இறக்கையில் இருந்து வரும் காற்றால் இழுக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கவே விமானநிலையத்தின் அருகில் நின்று யாராவது செல்ஃபி எடுத்தால் அபராதமும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது!