Data Corner



*உலகம் முழுவதும் 150 கோடி மக்கள் சரியான கழிப்பிட வசதிகள் இல்லாமல் நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

நல்ல குடிநீர் கிடைக்காததால் சுமார் 89 கோடி மக்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

*தமிழகத்தில் ஹெல்மெட் அணியாத காரணத்திற்காக இந்த ஆண்டு 47.87 லட்சம் பேர் மீது வழக்கு.

*உலகளவில் 11 - 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80% பேர், ஒரு நாளில் ஒரு மணி நேரம் கூட உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை.

*உலகம் முழுவதும் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 6.5 கோடிப் பேருக்கு தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய
 நிலை உள்ளது.

*உலகில் அதிக மாசுபாடு மிகுந்த நகரங்களில் 30, இந்தியாவில் உள்ளன.

*இந்தியாவில் 72,045 அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பயன்படுத்துவதற்குக் கூட கழிவறைகள் இல்லை.  

*சமூக வலைத்தளங்கள் பார்ப்பதால், பதின்பருவ பெண்களில் 51% பேரும், ஆண்களில் 45% பேரும் சாப்பாட்டு நேரத்தைத் தள்ளிப் போடுகின்றனர்.

தொகுப்பு: அன்னம் அரசு