Data’s அருமை!



‘Data Corner’ பக்கத்தில் எல்லா தகவல்களும் அருமை. வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக் கடன் தொகையைப் பார்த்ததும் தலை சுற்றியது.
- இலக்சித், மடிப்பாக்கம்; ஜெயராமன், கோவிலம்பாக்கம்; கீதா, கோவில்பட்டி.

‘தொல்(லைக்) காப்பியத்’தின் அதிரடிக் கலாய்த்தலில் முதல்வர் கனவோடு இருப்பவர்கள் முடங்கிப் போயிருப்பர்.
- ஆர்.ஜெ.சி, சென்னை; வரலட்சுமி முத்துசாமி, கிழக்கு முகப்பேர்; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கோவிந்தராஜ், தில்லை கங்கா நகர்.

‘ஆதித்ய வர்மா’வில் அதிரடி காட்டிய துருவ், தனது அடுத்த படங்களில் அப்பா விக்ரமின் ஆதிக்கத்தை கைப்பற்றுவார்.
- சந்திரமதி, சென்னை; மனோகரன், மேட்டுப்பாளையம்; கதிரவன், மதுரை; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்.

சூழல்களால் ‘கவுத்து’ விடப்பட்ட கௌதம் மேனன், தனது மீண்டு வருதல் பற்றிய பதில்களில் குடும்ப அரவணைப்பை இழையோட விட்டிருப்பது அழகு.
- கருணாகரன், போரூர்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; நடராஜன், சென்னை; பிரேமா குரு, சென்னை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; முரளி, நங்கநல்லூர்; சரண் சுதாகர், வேளச்சேரி.

இன்றைய சூழலில் மாவட்ட பிரிப்புகள் தவிர்க்க முடியாதுதான். ஆனாலும் அடிப்படை நோக்கத்தை அலட்சியப்படுத்திவிட்டு விளம்பர வெளிச்சத்தில் அரசு குளிர்காய்ந்து விடக்கூடாது என்பதுதான் பொதுமக்களின் ஆதங்கம்.
- மாதேஸ்வரன், தர்மபுரி; ப.மூர்த்தி, பெங்களூரு; தா.சைமன் தேவா, விநாயகபுரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்.

‘ஆயிரம் ஜென்மங்கள்’ சீக்ரெட்ஸை சொல்ல வந்த இயக்குநர் எழில், தனது எழில் நிறைந்த பதில்களால் தன்னைப் பற்றிய சீக்ரெட்களையும் அவிழ்த்துவிட்டுள்ளார்.
- கவுரிநாத், பரங்கிமலை; நிலவழகு, நீலாங்கரை; செம்மொழி, சேலையூர்; மியாவ்சின், கே.கே.நகர்; பப்பு, அசோக் நகர்; கலிவரதன், கீழ்க்கட்டளை.

மனித உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் என்றும் குரல் கொடுப்பேன் என்று கூறும் சந்துரு அவர்கள், ‘நீதியரசர்’ என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; பிரேமா ராஜ்குமார், குன்னூர்; நெல்லை குரலோன், பொட்டல்புதூர்; மனோகர், கோவை; இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத நாடு ஜப்பான் என்ற தகவல் அந்நாட்டின் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி; க.நஞ்சையன், பொள்ளாச்சி; அமிர்பத்ரா, மடிப்பாக்கம்; கணேசன், சென்னை.

‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் தமிழ் சினிமாவுக்குள் புதைந்து கிடக்கும் அரிய தகவல்களை அள்ளித்தரும் பணியில் அசத்திக்கொண்டிருக்கும் சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு அப்பாடக்கர்தான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ரீடர்ஸ் வாய்ஸ்