ஆன்டிம் : தி ஃபைனல் ட்ரூத்கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி வசூலைக் குவித்த இந்திப்படம், ‘ஆன்டிம் : தி ஃபைனல் ட்ரூத்’. இப்போது ‘ஜீ5’ல் காணக்கிடைக்கிறது. ராகுலின் தந்தை ஒரு விவசாயி. விவசாயம் நல்லபடியாக நடக்காததால் தன்னிடம்  உள்ள நிலத்தை விற்றுவிட்டு இப்போது ஒரு வீட்டில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார்.
அவர் வேலை செய்யும் வீடு உள்ள நிலம் கூட ஒரு காலத்தில் ராகுலின் தந்தைக்குச் சொந்தமானதுதான். ஊரில் சில பிரச்னைகள் காரணமாக ராகுலின் குடும்பம் நகரத்துக்கு குடிபெயர்கிறது. அங்கே ஒரு காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி பிழைப்பை ஒட்டுகின்றனர் ராகுலும், அவனது தந்தையும்.

ஒரு நாள் ரவுடிக் கும்பல் ஒன்று ராகுலின் தந்தையைத் தாக்குகிறது. வெகுண்டு எழும் ராகுல் அந்தக் கும்பலைத் துவம்சம் செய்கிறான். இதன் மூலம் பெரிய தாதாக்கள், அரசியல்வாதிகள் தொடர்புகள் ராகுலுக்குக் கிடைக்கிறது.

நாளடைவில் அந்த நகரத்தின் பெரிய டானாகிவிடுகிறான் ராகுல். ரவுடிஸத்தை அழிக்கப் பிறந்தவர் இன்ஸ்பெக்டர் ராஜ்வீர். ராகுலுக்கும் ராஜ்வீருக்கும் இடையிலான மோதலே மீதிக்கதை. ‘முல்சி பேட்டர்ன்’ எனும் மராத்திப் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்து. ராஜ்வீராக சல்மான் கானும், ராகுலாக ஆயுஷ் சர்மாவும் விளையாடியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் மகேஷ் மஞ்ச்ரேக்கர்.