புயல் மாப்பிள்ளை



இசைப்புயலின் மருமகனான சவுண்ட் என்ஜினியர்!எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான் - ரியாஸ்தீன் ரியானின் திருமணம் நடந்திருக்கிறது. ரஹ்மான் இந்தத் திருமணத்தை மகள் கதீஜாவின் விருப்பத்தை ஒட்டி மிகவும் எளிமையாக நடத்தியிருக்கிறார். மிகவும் பெர்சலான நிகழ்வாக திருமணம் முடிந்தது.
ரஹ்மானின் மருமகன் ரியாஸ்தீன் ரியான் பல வருடங்களாக ரஹ்மான் ஸ்டுடியோவில் சவுண்ட் என்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார்.

அவரது தொழில் திறமையும், அமைதியான நல்ல குணங்களும் ரஹ்மானை மிகவும் கவர்ந்துவிட்டன. அதனால் அவரை தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்திற்கு வந்திருக்கிறார். பிறகு ரியாஸ்தீன் பெற்றோர்களை வரவழைத்துப் பேசி இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த நிக்காஹ் நடத்தி முடிக்கப்பட்டது.

சிலர் சொல்வதுபோல இது ரகசியத் திருமணமும் அல்ல. காதல் திருமணமும் அல்ல. ரஹ்மான் மனம் வைத்து சந்தோஷமாக நடத்தி வைத்த திருமணம் என்கிறார்கள். ரஹ்மானின் பிரியமான அம்மா இல்லாத குறை நீங்க, அவரின் பெரிய படத்திற்கு முன்னாலேயே எளிமையாக திருமணத்திற்கான மதச்சடங்குகள் நடந்து முடிந்திருக்கின்றன. மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ரஹ்மான்.

பி.கே