வலைப்பேச்சு



@iParisal - எங்காச்சும் ரோட்டோரமா நிக்கறப்ப ‘இப்ப நம்ம மேல வந்து எதுனா காரோ பைக்கோ மோதினா இங்க எந்த சிசிடிவி அதை கவர் பண்ணும்’னு சுத்தியும் பார்க்கறேன். ச்சை!

@Yavanika Sriram - தன்னை எதன் பொருட்டும் அதிகம் அறியத்தராதவர்கள்தான் எக்காலத்தும் புத்தம் புதிய காதலில் இறக்கும் வரை திளைக்கிறார்கள்.

@Kozhiyaar - கணவனைப்‌ போலவே குழந்தைகளையும் கட்டுப்படுத்த முயல்வதே வீட்டில் முக்கால்வாசி பிரச்னைகளுக்கு காரணம்!

@Aruna Raj - டேய் அதான் unsubscribe பண்டேன்ல? You are now unsubscribed னு வேற ஒரு மெயில் அனுப்பணுமா?

@urs_venbaa - பிஸியா இருக்கிறவங்களுக்குதான் எதையும் எப்போதும் செய்ய நேரம் இருக்கும். சோம்பேறிகளுக்கு அது வாய்ப்பதில்லை.

@talksstweet - குடிகாரனுடன்கூட வாழ்ந்திடலாம்... எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள்கூட வாழ்வது நரகத்தை விட மோசமானது.

@amuduarattai - ஒரு ஊரின் வறுமையை அங்குள்ள அடகுக் கடைகளின் எண்ணிக்கையும், ஒரு ஊரின் வளத்தை அங்குள்ள வங்கிகளின் எண்ணிக்கையும் சொல்லிவிடும்.

@Senthil Jagannathan - புதிதாக வாங்க இயலாத பால்யத்தில் தொலைத்த எதுவுமே பல மடங்கு உயர்வானது.

@T V Radhakrishnan - இன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இனி, ஜெம் க்ளிப், ரப்பர் பேண்ட், வெள்ளைத்தாள் எல்லாம் காசு கொடுத்துத்தான் வாங்கணுமேன்னு கவலை!

@Sasikala - ஒரு ஆணை எவ்விதத்திலும் சிந்திக்க விடாமல் தன் பார்வையையே அவனது பார்வையாகவும் மாற்ற வைக்கும் கேடுகெட்ட ஆற்றலைக் கொண்டிருப்பவள்தான் பெண்.

@Buhari Raja - Reels வீடியோ போடலாம்னு இருக்கேன். ஒரு Zomato T-shirtம் School bag  ஒண்ணும் குடுணே...

@Ramanujam Govindan - Profile photoவா கிருஷ்ணர் படம் வச்சிருக்கீங்க. ராதையோடு. RadhaKrishnan ன்னு பேர் வச்சிருக்கீங்க. அது Radhakrishnan ஆ... இல்லை Radha Krishnan ஆ... என்று தெரிந்தால் friend request ஐ ஏற்றுக் கொள்ளலாம்!

@Kozhiyaar - ‘எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்’ என்ற நிலைக்கு தம் மகன் வந்ததை உணர்ந்த பின்புதான், தந்தை மகனுக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார்!

@teakkadai1 - இன்னமும் ஸ்மார்ட் போன் வசதி கிடைக்காத, கிடைத்தும் ஏதும் பார்க்க முடியாமல் சிக்கி யிருக்கும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு.

@GOV_INDA_RAJ - ஏம்மா பக்கத்து தெருக்காரி யார்கூடவோ ஓடிப்போனதுக்கு, நான் ஆஃபீஸ்ல இருக்கேனானு எங்க ஓனா் கிட்ட போன் போட்டு கேட்டிருக்க..? நீ எல்லாம் பெத்த தாயா?!

@Ramanujam Govindan - மனைவியரைப் போல் நேரத்துக்குத் தக்கவாறு மாற்றி மாற்றிப் பேசுபவர்கள் வேறு யாரும் இல்லை.வெளியிடங்களில் பர்ஸைக் காணோம் என்று தேடும்போது ‘எப்பவும் பேண்ட் பாக்கெட்லேயே வைக்கணும், அந்த பழக்கமே கிடையாது’ எனத் திட்டுகிறார்கள்.சரி... அவர்கள் சொன்னார்களே என பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்தால் அதற்கும் திட்டுகிறார்கள்... ‘வாஷிங் மிஷின்ல பேண்டைப் போடும்போது பாக்கெட்லேர்ந்து பர்ஸை எடுக்கக் கூடவா தெரியாது?’ என.