நீல தோசை!



சங்க காலத்திலேயே தமிழர்களின் உணவுப் பட்டியலில் தோசையும் இருந்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. இவ்வளவு வருடங்கள் கழித்த பிறகும் தமிழ்நாடு, கர்நாடகா உட்பட தென்னிந்தியாவின் முக்கியமான உணவுகளில் ஒன்றாக தோசை இருப்பது ஆச்சர்யம். 
தோசை பரவலாக அறிமுகமான நாட்களில் மசாலா தோசை, வெங்காய தோசை, நெய் தோசை என்று குறிப்பிட்ட வகைகளில் மட்டுமே கிடைத்து வந்தது. பிறகு நூற்றுக்கணக்கான வகைகளில் தோசைகள் கிடைக்க ஆரம்பித்தன. அத்துடன் இந்தியாவில் எங்கு சென்றாலும் தோசைக்கு மவுசு உண்டானது.

இன்று உலகம் முழுவதும் தோசை கிடைக்கிறது. இந்நிலையில் ராய்ப்பூர் நகரில் உள்ள ஓர் உணவகத்தில் நீலக் கடல் தோசையை அறிமுகப்படுத்தியுள்ளனர். நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் அந்த தோசைதான் தோசை வகைகளில் லேட்டஸ்ட். நீல வண்ணத்துக்காக என்ன சேர்க்கிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது அந்த உணவகம். உணவுப் பிரியர்களும், யூடியூபர்களும் நீலக் கடல் தோசையைத் தேடி படையெடுக்கின்றனர்.

த.சக்திவேல்