லவ் டிப்ஸ்!



‘‘ஒரு பெண், தன்னுடைய எதிர்காலத்தை, கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ முடிகிற ஆண் யாரென்று பார்த்து தேர்ந்தெடுக்கவேண்டும். இப்படியொரு காதலர் கணவராவது முக்கியம். ஒரு வெற்றிகரமான பெண்ணுக்கு பின்னால் இப்படியொரு உதவும் ஆண் மிக மிக அவசியம்.காதல் உறவில், மனநிம்மதி ரொம்ப ரொம்ப முக்கியம். 
வெறித்தனமாக காதலித்தாலும், மெச்சூர்டாக காதலித்தாலும், காதலிக்கிற பெண்ணுக்கு மனநிம்மதி முக்கியம். அதனால் உங்கள் காதலில் அந்த மனநிம்மதி இல்லையென்றால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்த காதலை முறித்துவிட்டு வெளியே வாருங்கள்.

காதலில், ஆண்கள் எக்கச்சக்கமாக சத்தியம் செய்வார்கள். நிறைய வாக்குறுதி கொடுப்பார்கள். அப்படிச் சொல்கிற விஷயங்களை உண்மையிலேயே பின்பற்றுகிற ஆண்தான் நம்பிக்கைக்குரியவர் என்பதில் நீங்கள் தெளிவாக இருங்கள்.

வார்த்தைகளை விட செயல்கள்தான் முக்கியம். வாய் வார்த்தைகளால் மயக்குபவரைவிட, சொன்னதை செயலில் காட்டும் ஆண்கள்தான் முக்கியம்...’’இப்படி மூன்று டிப்ஸை இளம் பெண்களுக்கு கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.  

காம்ஸ் பாப்பா