பரோட்டா சூரி இப்போது கருடா சூரி!ஆம். ‘பரோட்டா’ சூரி இப்போது ‘கருடா’ சூரியாக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார். ஒரே காரணம், இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் சூரியின் ‘கருடன்’ படமும் இடம்பிடித்திருப்பதுதான்.‘கருடன்’ ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது சூரியை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து பிரபல ஓடிடி நிறுவனம் பெரும் தொகை கொடுத்து உரிமையை வாங்கியிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட முன்னிலையில் இருக்கும் தமிழ் நடிகர்களுக்கு அடுத்த வரிசையில் இருக்கும் நடிகர்களின் படத்தை ஓடிடியில் ஒளிபரப்ப வாங்கும் தொகைக்கு சமமாக இது இருக்கிறதாம்.
‘கருடன்’ படத்தின் தியேட்டர் வசூல் ப்ளஸ் ஓடிடி உரிமம் ஆகியவற்றை தொடர்ந்து சூரியின் மார்க்கெட் உயர்ந்திருப்பதாக அவரது தரப்பில் நினைக்கிறார்கள்.  நல்ல விஷயம்தானே! l

காம்ஸ் பாப்பா