ஷாருக் படத்தில் சமந்தா!சினிமாவில் பரபரவென முன்னுக்கு வந்து கொண்டிருந்த சமந்தா வாழ்க்கையை மையோசிடிஸ் நோய் புரட்டி போட்டு விட்டது. இப்பொழுது சமந்தா உடல் நலம் ஓரளவுக்கு தேறினாலும், அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் யாரும் தயாராக இல்லை. ஒரு பக்கம் சினிமாவில் நடிக்க புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. 
ஆனால், எப்படியாவது சினிமாவிலே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார். அந்நிறுவனம் அறிவித்தபடி இன்னும் ஷூட்டிங் எதுவும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், சமந்தாவை டிக் செய்திருக்கிறார் என்று பேச்சு அடிப்படுகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் ஷாருக்கான் இணையவிருக்கும் புதிய படத்தில் சமந்தா நடிக்கப் போகிறாராம். பேட்டி ஒன்றில் ‘மகேஷ் பாபு, ஷாருக்கான், சூர்யா’ என மூன்று நட்சத்திரங்களுடன் நடிக்க விரும்புவதாக சமந்தா சொல்ல... இது ஷாருக் காதுகளுக்குப் போக... இதோ டிக்!  ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி இணையும் படம், நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்ட உணர்வுபூர்வமான படமாக இருக்குமாம்.

காம்ஸ் பாப்பா